Varalakshmi Vratam (Photo Credit: @shrewdbird / @Adithya_offl X)

ஆகஸ்ட் 07, சென்னை (Chennai News): அன்னை பராசக்தியின் வடிவமான மகாலட்சுமியின் பூரண அருள் கிடைக்க, வேண்டிய வரங்கள் கிடைக்க வரலட்சுமி விரதம் (Varalakshmi Vratam) முக்கியமான நாளாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதத்தில் ஆடி-ஆவணியில் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் சிறப்பிக்கப்படுகிறது. திருமணம் முடிந்த பெண்கள் தங்களது கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும், குடும்ப விருத்திக்காகவும் வரலட்சுமி நோன்பு (Varalakshmi Nonbu) இருப்பது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவும், மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும் வரலட்சுமியை வேண்டலாம். Varalakshmi Viratham 2025: வரலட்சுமி விரதம் 2025 எப்போது?.. லட்சுமி தேவியின் அருள் கிடைக்க பூஜை, நல்ல நேரம், வழிபாட்டு முறை இதோ.! 

வரலட்சுமி விரதம் நல்ல நேரம் (Varalakshmi Vratam Nalla Neram):

வரலட்சுமி விரதம் நாளில் மகாலட்சுமியை வீட்டுக்கு அழைத்து பூஜை செய்வது லட்சுமியின் அருள் வீட்டில் நிலைத்திருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வரலட்சுமி விரதம் நாளில் மட்டுமல்லாது ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் வரலட்சுமி நினைத்து விரதம் இருப்பது நல்லது. தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் வரலட்சுமி விரதம் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் காலை நல்ல நேரமாக 06:30 மணி முதல் 08:45 மணி வரையும், பிற்பகலில் ஒன்று 02:00மணி முதல் 3:40 மணி வரையிலும், மாலையில் 07:29 மணி முதல் 08:55 வரையிலும் கணிக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி மந்திரங்களை இத்துடன் பாடல் தொகுப்பாகவும், விளக்கமாகவும் வீடியோ வடிவில் உங்களின் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

வரலட்சுமி மந்திரம் - தமிழ் பாடல் வரிகள் (Varalakshmi Puja Mantra):

வீடியோ நன்றி: Anush Audio

அம்பிகை அழைப்பு முறை:

வீடியோ நன்றி: Athma Gnana Maiyam