Varalakshmi Viratham 2025 (Photo Credit : Youtube / @kavita_senthil X)

ஆகஸ்ட் 05, சென்னை (Festival News): ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என பல விசேஷமான நாட்களை ஆடி மாதம் கொண்டுள்ளது. ஆடி மாதத்தின் மிக முக்கிய விஷேஷங்களுள் வரலட்சுமி விரதமும் ஒன்றாகும். வரலட்சுமி விரத நாளில் குடும்ப நலன் காக்கவும், கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கும், செல்வ வளம், சுபிட்சம் கிடைக்கவும், குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்கவும் வேண்டி பெண்கள் விரதம் இருந்து மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து பூஜை (Varalakshmi Pooja) செய்து வழிபடுவர். இந்நன்னாளில் செல்வங்களுக்கு அதிபதியான மகாலட்சுமியை வழிபடுவதால் மகாலட்சுமியின் அருளும், ஆசியும் பெற முடியும். தன் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை வாரி வழங்கும் லட்சுமி என்பதால் அவருக்கு வரலட்சுமி என்று பெயர் உண்டாயிற்று. வரலட்சுமி விரதத்தை (Varalakshmi Viratham) சுமங்கலி விரதம், மாங்கல்ய நோம்பு, வரலட்சுமி நோம்பு (Varalakshmi Nonbu) உள்ளிட்ட பெயர்களிலும் மக்கள் அழைக்கின்றனர்.

வரலட்சுமி விரதம் (Varalakshmi Viratham 2025) :

வரலட்சுமி விரதம் இருந்து வழிபடுவதால் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமியின் 8 அவதாரங்களின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். மாங்கல்ய பலத்திற்கும், மங்களத்திற்கும், நிறைவான வாழ்விற்கும் 16 வகை செல்வத்தை வழங்கக்கூடிய மகாலட்சுமியை நினைத்து இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து பூஜைகள் செய்வர். வரலட்சுமி விரதத்தால் அஸ்வமேத யாகம் நடத்தியதற்கு இணையான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நன்னாளில் திருமணமான பெண்கள் மாங்கல்ய பலத்திற்கும், திருமணமாகாத பெண்கள் நல்வாழ்க்கை அமைய வேண்டி நோன்பு கயிறு கட்டி விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடுவர். Gold Rate Today: மீண்டும் ரூ.75,000 ஐ நெருங்கிய தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?.! 

வரலட்சுமி விரதம் 2025 எப்போது (Varalakshmi Viratham Date)?

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படும் வரலட்சுமி விரதம், இந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வருகிறது. அதன்படி ஆடி மாத பௌர்ணமியில் திருவோண நட்சத்திரத்தில் இந்த சிறப்பு வாய்ந்த வரலட்சுமி விரதம் வருகிறது. இதனால் மகாலட்சுமியை வணங்கி பூஜை செய்வதற்காக ஆகஸ்ட் 7-ஆம் தேதியே வீட்டை நன்கு சுத்தம் செய்து பூஜைகளுக்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைப்பது நல்லது. இதன் மூலம் வரலட்சுமி விரதத்தில் 16 வகை செல்வத்தையும் பெற்று அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற இயலும்.

வரலட்சுமி விரதம் 2025 பூஜை நல்ல நேரம், விரதத்திற்கு உகந்த நேரம் (Varalakshmi Viratham Nalla Neram) :

அஷ்டலட்சுமியை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரமாக ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரையும், ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 6:00 மணி முதல் 7:20 மணி வரையும் இருக்கிறது. வரலட்சுமி நோன்பிற்காக விரதம் இருந்து திருமணமான பெண்கள் மாங்கல்ய பலத்தை பெறவும், திருமணமாகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டுவதற்கும் உகந்த நேரமாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 9:00 மணி முதல் நல்லநேரம் தொடங்குகிறது. அதன் படி மகாலட்சுமியை வழிபடுவதற்கான உகந்த நேரமாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 9:00 மணி முதல் 10:20 மணி வரை இருக்கிறது. மாலை 6:00 மணிக்குள் வரலட்சுமி பூஜையை செய்து முடிப்பது நல்லது. Pongal Recipe: தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

மகாலட்சுமியை வழிபடும் முறை (Varalakshmi Viratham Murai) :

  • வரலட்சுமி விரத நாளில் லட்சுமியை வீட்டிற்கு அழைக்க தேங்காயில் மஞ்சள், குங்குமம் பூசி ஆகஸ்ட் 7-ஆம் தேதி வியாழக்கிழமையன்று இரவு வைத்துவிட வேண்டும்.
  • பின் அதிகாலை குளித்துவிட்டு வாசலில் கோலமிட்டு வரலட்சுமி விரதத்தை தொடங்க வேண்டும்.
  • கலசத்தில் மஞ்சள், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை பழம், மாவிலை வைத்து அதன் மீது தேங்காய் வைத்து வழிபட வேண்டும்.
  • பழங்கள், சர்க்கரை பொங்கல், மங்களப் பொருட்களை வைத்து அருகம்புல் தூவி பூஜை செய்ய வேண்டும்.
  • பூஜையின் போது மகாலட்சுமியின் ஸ்தோத்திரம், அஷ்ட லட்சுமியின் திருநாமங்களை கூறி வழிபடுவது சிறப்பு.
  • வரலட்சுமி விரதத்தன்று விருந்தினர்களையும், சுமங்கலி பெண்களையும் வீட்டிற்கு அழைத்து மங்களப் பொருட்கள், தாம்பூலம், குங்குமம் உள்ளிட்டவற்றை கொடுத்து மூத்த சுமங்கலிகளின் கைகளால் நோன்பு கயிறு கட்டிக்கொண்டு ஆசிர்வாதம் பெற வேண்டும்.
  • லட்சுமி தாயின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி அர்ச்சனை செய்து விளக்கு பூஜை செய்து வழிபடுவது அவசியம். இதன் மூலம் கடன் பிரச்சனை நீங்கி, நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற முடியும்.
  • வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்க முடியாத பெண்கள், நவராத்திரியின் 9 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
  • கலசம் வைத்து பூஜை செய்ய முடியாதோர் மகாலட்சுமியின் படத்தை வைத்து விளக்கு ஏற்றி மலர் தூவி பூஜை செய்வது சிறப்பை தரும்.