
ஜூன் 12, சென்னை (Health Tips Tamil): ஆதியில் வசித்து வந்த மக்கள் பெரும்பாலும் நடக்கும் போது செருப்பு (Slipper), ஷூ (Shoe) போன்றவை இல்லாமலேயே நடந்து வந்தனர். முற்பகுதியில் நடக்கும்போது அவர்களின் வயதுக்கு ஏற்ப மரக்கட்டைகளால் ஆன தற்காலிக செருப்புகளையும் பயன்படுத்தி வந்தனர். காலங்கள் மாற பலரும் காலணிகளை பயன்படுத்த தொடங்கி, இன்று அது அத்தியாவசியமான ஒன்றாகவும் மாறிவிட்டது. பிறந்த குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை என பலரும் தங்களுக்கு பிடித்த செருப்பு, ஷூ போன்றவற்றை சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர்.
காலணி இல்லாமல் நடப்பதால் ஆரோக்கியம் மேம்படுமா?
மேலும் கழிவறைக்கு தனி காலணியும், வீட்டில் உபயோகிக்க மற்றொன்று, வெளியில் செல்ல வேறு காலனி என உபயோகித்து வருகின்றனர். பாக்டீரியா தொற்று உள்ளிட்டவைகளில் இருந்து பாதுகாப்பதற்கு அது அத்தியாவசியமாகிறது. இந்நிலையில் நிலத்தில் காலணி இல்லாமல் வெறும் காலில் நடப்பதால் (Walking Benefits) உடலின் ஆரோக்கியம் மேம்படும். கால்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது என்ற தகவல் காரணமாக பலரும் மீண்டும் வெறும் காலில் நடப்பதை வாடிக்கையாக்க தொடங்கி இருக்கின்றனர். Health Tips: இந்த அறிகுறியெல்லாம் இருக்கா?.. பெரிய ஆப்பு.. உடனே செக் பண்ணுங்க.!
செல்கள் பலம் பெறும் :
வெறும் காலில் நடப்பது (Barefoot Walking) இயற்கையாக ஒரு மனிதனின் நடையை மீட்டெடுக்கிறது. இதனால் கால் வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது. இடுப்பு, முழங்கால் பகுதிகள் இயல்பாக செயல்படவும் பயன்படுகிறது. வெறும் காலுடன் நடப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மையில் எளிமையான அறிவியல் கருத்துக்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மனித உடலில் இருக்கும் நேர்மறை மின்னோட்டமானது தூண்டப்பட்டு, நமது செல்கள் இதனால் பலம் பெறுகின்றன.
உடலின் ஆற்றல் அதிகரிக்கும் :
நரம்பு மண்டலம் மூளைக்கு சமிக்கைகளை அனுப்ப உடலுக்குள் மின்சாரம் பாய்கிறது. இதனால் சிந்திக்கவும் நகரவும் பயன்படுகிறது. நாம் ஓய்வெடுக்கும் போது செல்கள் எதிர்மறை மின்னோட்டத்தை பெற்றிருக்கும். பூமி எதிர்மறை மின்னூட்டம் கொண்டதால் தான் மனிதர்கள் கால்களில் (Barefoot Walking Benefits) பூமியில் நடக்கும் போது அதன் எதிர்மறை, நேர்மறையாக மாறி சமநிலை ஏற்படுகிறது. இந்த சமநிலை இயற்கையானது என்பதால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் :
ரத்த அழுத்தம் குறையும். மணல் உள்தரையில் நடப்பது கூடுதல் பலன்களையும் தரும். சுத்தமான இடங்களில் காலணிகள் இல்லாமல் நடப்பது நன்மையை தரும் என்றாலும், அசுத்தமான இடங்களில் காலணிகள் மிக முக்கியமானது. காலணிகள் இல்லாமல் நடந்தால் கட்டாயம் கிருமித் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.