மார்ச் 14, மதுரை (Health Tips): கோடைகாலத்தின் வெயிலை தணிக்க தற்போது எல்லா ஊர்களிலும் தர்பூசணி பழத்தின் (Watermelon) வருகை அதிகரித்துள்ளது. அந்த வகையில், மதுரையில் ஒரு கிலோ பழம் ரூ.25 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Tea Avoid Benefits: டீ பிரியரா நீங்கள் – டீ குடிப்பதை நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
தர்பூசணி பழத்தில் வைட்டமின் சி,பி அதிகமாக இருக்கும். மேலும், அதில் இரும்புச்சத்து, புரதச்சத்து நிறைந்து இருக்கும். அதுபோக, உடல் சூட்டை குறைத்து உடல் எடையையும் குறைக்கிறது. ஆனால், இந்த காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை பிரச்சனைகள் உள்ளன. இவற்றிற்கு, தர்பூசணி சிறந்த நன்மை தரக்கூடிய பழமாக இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய லைகோபின் மூலமாக பெண்கள் அதிகமாக பாதிக்கக்கூடிய கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய்கள் வராமல் தடுப்பதற்கு இது சிறந்த பயனளிக்கிறது.
மேலும், இதில் உள்ள பீட்டா மற்றும் கரோட்டின் மூலம் முகம் பளபளப்பாகவும் மற்றும் உடலில் ஏற்படும் அலர்ஜிகளையும் இது தடுக்கிறது. தர்பூசணி பழத்தினை நாம் அனைவரும் தாராளமாக உட்கொள்ளலாம். மேலும், பெண்களுக்கு பல்வேறு விதத்தில் இந்த பழம் நல்ல பலன்களை அளிக்கிறது.