மார்ச் 14, சென்னை (Health Tips): இந்தியர்களிடம் பெரும்பாலும் தேநீர் மீதான மோகம் அனைவருக்கும் இருக்கிறது. தேநீர் (Tea) பிரியர்கள் காலை எழுந்ததும் பல் துலக்கிய உடனே தேநீர் அருந்துவது அவர்களுடைய முதல் கடமையாகும். தேநீர் அருந்தியவுடன் ஏதோ சக்தி கிடைத்தது போல் உணர்வோம். ஒரு நாளைக்கு இரண்டு முறை தேநீர் குடிப்பதினால் எதுவும் இல்லை. ஆனால், அதிக அளவில் அடிக்கடி தேநீர் அருந்துவது நம் உடலுக்கு பெரும் அபாயத்தை உண்டாக்கும். இவ்வாறு நாம் தேநீரை எந்த அளவிற்கு எடுத்துக்கொள்ளலாம், மேலும், அதனை தவிர்ப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றம் குறித்து இதில் காண்போம். Imran Khan About PAK Economic Crisis: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் கூறிய அதிர்ச்சி தகவல் – பொருளாதார நிலையில் மாற்றம்..!
தேநீர் குடிப்பதை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்: நமது உடலில் உள்ள காஃபைன் உட்கொள்ளல் அளவு குறைகிறது. இதனால் நமக்கு நல்ல தூக்கமும் கிடைப்பதோடு, பதற்றமும் குறைகிறது. தேநீரை அதிக அளவில் அருந்துவதால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைகிறது. மேலும், இதை தவிர்ப்பதால் நமது செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்லை குறைக்கிறது. இதன் மூலம், செரிமான பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம்.
தேநீரை தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்: திடீரென தேநீர் குடிப்பதை நிறுத்தினால், சிலருக்கு அது மன ரீதியான பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. மேலும் உடல் சோர்வு, தலைவலி, மந்தத்தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும். சில நாட்களுக்கு இவ்வாறு இருக்கக்கூடும். நாளடைவில் இது போன்ற அறிகுறிகள் சரியாகிவிடும்.
தேநீருக்கு பதிலாக பழச்சாறு, வெந்நீர் மற்றும் மூலிகை தேநீரை பருகலாம். புதினா, சாமந்திப்பூ போன்ற மூலிகை தேநீர்களை பருகுவது நம் உடலுக்கு நன்மை தரும். மேலும், ஆப்பிள் மற்றும் கிரான்பெரி போன்ற பழச்சாறுகள் நமக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன. வெந்நீருடன் எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து பருகுவது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. மேலும், வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும். அதிகளவில் தேநீர் அருந்தும் நபர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படும்.
மேலும், உங்களுடைய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு சரியான முறையில் மருத்துவரின் ஆலோசனை கேட்பது சிறந்தது.