ஜூலை 16, சென்னை (Health Tips): குழந்தைகள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகளை இன்றளவில் எடுத்துக்கொள்வது இல்லை. அவர்களால் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளிலும் ஊட்டச்சத்து என்பது குறைந்த அளவே இருக்கிறது. இதனால் பெற்றோர் தங்களின் குழந்தையின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு, அவர்களின் வாய்த்துக்கேற்ப ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவுகளை வழங்க வேண்டும்.
குழந்தைகளை புரிந்து செயல்படுங்கள்:
இளம்வயதில் குழந்தைகள் அனைவருமே பொதுவாகவே விளையாட்டுத்தனத்துடன் காணப்படுவார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தருவதுடன், விளையாடிக்கொண்டு அதனை சாப்பிட வைப்பது நல்லது. குறைந்தபட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்க 1 மணிநேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் சத்துள்ள ஆகாரங்களில் எதனை விரும்புகிறார்கள் என தெரிந்து செயல்பட வேண்டும். Raayan Trailer Update: தனுஷின் 'ராயன்' பட டிரைலர் இன்று மாலை வெளியீடு; படத்தயாரிப்பு குழு அறிவிப்பு.!
மூளை நினைவாற்றலை அதிகரிக்கும் வால்நட்:
துரித உணவுகள் உட்பட நொறுக்குதீனிகளில் இன்றளவில் ரசாயன கலவைகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் அவ்வாறான உணவுகள் வழியே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வாய்ப்புகள் என்பது குறைவு. எனினும், குழந்தைகளின் ஞாபசக்தியை அதிகரிக்க வால்நட் கொடுக்கலாம். வால்நட் குழந்தையின் மூளை செயல்பாடுகளை சுறுசுறுப்படைய செய்யும். மூளையின் வளர்ச்சிக்கு வித்திடும் வால்நட், வளரும் குழந்தைகளின் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கும். மூளை அல்சைமர் நோய்களை தடுக்கும் வால்நட்டை குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 2-3 கொடுக்கலாம்.
பாதாம், வேகவைத்த முட்டையின் மகிமை:
வைட்டமின் ஈ நிறைந்துள்ள பாதாம், நினைவாற்றலை அதிகரிக்க உதவும். இதனை காலை அல்லது மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு வழங்கலாம். இரவு நேரத்தில் செரிமானக்கோளாறு சிக்கல் உண்டாகும் என்பதால், இரவுகளில் அதனை தவிர்ப்பது நல்லது. நாளொன்றுக்கு 3 - 5 பாதம் கொடுக்கலாம். ஒமேகா 3 கொலஸ்ட்ரால் அமிலம், கொலின் ஊட்டச்சத்து நிறைந்துள்ள வேகவைத்த முட்டையை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவி செய்யும்.
மீன், பால்:
வைட்டமின் டி, பி12 கால்சியம், பாஸ்பர் போன்றவை நிறைந்து காணப்படும் மீன், மூளை செயல்பாடுகளுக்கு நன்மை வழங்கும், நினைவாற்றல் சக்தியை அதிகரிக்கும். கால்சியம், புரதம், வைட்டமின், தாது நிறைந்த பால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும். இது மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவி செய்யும். அதேபோல, குழந்தைகள் இரவில் குவளை அளவு பால் குடித்தால் நன்கு உறங்குவார்கள்.