டிசம்பர், 11: பொதுவாக சிலரின் கண்கள் சிவந்த நிறத்தில் (Eyes Red) பார்க்க காட்சியளிக்கும். தூக்கமின்மை, உடற்சோர்வு (Sleepiness & Tired) போன்ற காரணத்தால் கண்களின் நிறம் மாறும். இவை ஒருசில நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். ஆனால், அவை நோய்க்கான அறிகுறியாக இருந்தாலும் கண்கள் சிவப்பு நிறத்தில் தொடர்ந்து காட்சியளிக்கும்.
உங்களது கண்களில் காயம், எரிச்சல், நீர் வழிவது போன்றவை தென்படும் பட்சத்தில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது அவசியம் ஆகும். கண்கள் சிவப்பு நிறத்துடன் காணப்படுவதற்கு பிற காரணமும் இருக்கலாம். அதேபோல, கொரோனா தொற்றால் நுரையீரல் & சுவாசக்குழாய்களில் பாதிக்கப்பட்டாலும் இதயம் மற்றும் கண்களில் அறிகுறி தென்படும். WomenObesity: பெண்கள் உடல்பருமன் விஷயத்தில் தமிழ்நாடு டாப்.. நகர்ப்புற பெண்கள் கடும் பாதிப்பு.!
கண்களின் வழியே நுழைய வாய்ப்புள்ள வைரஸ்கள் கண்களை பாதிக்கும்போது சிவந்த நிறம் ஏற்படுகிறது. காண்டாக்ட் லென்ஸ் உபயோகம் செய்யும் பழக்கமுள்ளவர்கள் அதனை சரியாக சுத்தம் செய்யாமல், சரிவர கண்களில் பொறுத்தாமல் இருந்தாலும் கண்கள் சிவப்பு நிறமடையும்.
காண்டாக்ட் லென்ஸ்களை (Contact Lens) எடுக்காமல் உறங்குதல், மழைகளில் நனைந்தால் போன்றவையும் கண்களில் காயம் & சிவந்த நிறம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பிளேபரிடிஸ் எனப்படும் கண்களில் ஏற்படும் தோற்றால் கண்களின் இமைப்பகுதி வீக்கமாகி கண்கள் சிவக்கும்.
கண்களில் காலாவதியான மருந்துகளை அலட்சியமாக ஊற்றுவது, காலாவதியான அழகு சாதன பொருட்களை கண்களுக்கு அருகே பயன்படுத்துவதும் கண்களில் தொற்றுகளை ஏற்படுத்தும். காய்ச்சல் மற்றும் ஒவ்வாமை காரணமாகவும் கண்களின் நிறம் மாறும். இவ்வாறான காரணங்கள் கண்கள் சிவப்படைந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.