டிசம்பர் 22, புதுடெல்லி (New Delhi): இந்தியா தனது குளிர்காலத்தில் அடியெடுத்து வைத்து, தற்போது நாடெங்கும் உள்ள பல மாநிலங்களில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மார்கழி, தை இறுதியில் குளிர் உச்சகட்டத்தை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தற்போது இந்தியா தனது நீண்ட இரவுக்கு இன்று தயாராகி வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும்: குளிர்காலத்தில் வடமாநிலங்களில் பழக்கப்படி சங்கிராந்தி என்று அழைக்கப்படும் நீண்ட இரவு மற்றும் குறுகிய பகல் இன்று நடக்கிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 21 அல்லது 22ம் தேதிகளில் இந்நிகழ்வு சுழற்சி முறையில் நடைபெறும். நடப்பு ஆண்டில் டிசம்பர் 22ம் தேதி நீண்ட இரவு நாள் வந்துள்ளது. Living Together Partner Killed: 6 ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கை: திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் கொலை.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு.!
நீண்ட இரவு இன்று: குளிர்காலத்தில் சூரியனின் வடக்கு அரைக்கோளம், நீண்ட தொலைவில் சாய்ந்துள்ள சமயத்தில் ஏற்படும் விளைவு, ஆண்டின் ஒருநாள் நீண்ட இரவையும், குறுகிய வெளிச்சம் கொண்ட நாளையும் ஏற்படுத்தும். புவியானது தனது அச்சில் 23.4 கோண அளவில் சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது.
நட்சத்திரங்களை ரசிக்கலாம்: இதனால் பூமியின் துருவம் என்பது பகலில் சூரியனை நோக்கி தொலைவில் இருப்பினும், சுழற்சி காரணமாக இரவில் மிக நீண்ட நேரம் வெளிச்சம் இருக்காது. இதுவே குளிர்கால சங்கிராந்தி என்று அழைக்கப்படுகிறது. இன்று காலை 08:57 மணிக்கு வெளிச்சம் தொடங்கி, 7 மணிநேரம் 14 நிமிடங்கள் இருக்கும். அதனைதொடர்ந்து இரவு வந்துவிடும். மழை மேகங்கள் இல்லாத இடங்களில் நாம் நட்சத்திரங்களை கண்டு ரசிக்கலாம்.