Crime | Couple Hold Hand (Photo Credit: Pixabay)

டிசம்பர் 22, புதுடெல்லி (Delhi Crime News): பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தை சார்ந்தவர் பங்கஜ்குமார் மெக்தோ (வயது 39). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். வேலை விஷயமாக டெல்லிக்கு வந்தவர், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். பங்கஜ்குமார் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டில், தமன்னா என்ற 32 வயது பெண்மணியும் தனது கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

வற்புறுத்திய லிவிங் டுகெதர் காதலி: இந்நிலையில், பங்கஜ்குமார் மற்றும் தமன்னா இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியதை தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தமன்னா நாம் இருவரும் திருமணம் செய்து ஒன்றாக வாழலாம், உனது குழந்தைகள் மற்றும் மனைவியை விட்டுவிட்டு வா என்று பங்கஜகுமாரை வற்புறுத்தி இருக்கிறார். இதில் விருப்பமில்லாத பங்கஜ்குமார், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, பங்கஜ்குமார் தனது கள்ளக்காதலியை கொலை செய்துள்ளார்.

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்: பின் அவரின் உடலை வீட்டின் மொட்டை மாடியில் உள்ள தொட்டியில் போட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். இரண்டு நாட்கள் கழித்து அழுகிய நிலையில் சடலம் துர்நாற்றத்துடன் வீசத் தொடங்கியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், பங்கஜ் குமார் மாயமானதால், அவர் கொலை செய்தது தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். Salaar on TamilRockers: சலார் படக்குழுவுக்கு அதிர்ச்சி தந்த தமிழ் ராக்கர்ஸ்: இணையத்தில் லீக்கானது..! 

Crime | Couple Hold Hand (Photo Credit: Pixabay)

காவல்துறையினர் தேடுதல் வேட்டை: பங்கஜின் சொந்த ஊர் பீகார் மாநிலம் என்பதால், அங்கு விரைந்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். டெல்லி காவல்துறையினர் பீகார் வருவதற்கு முன்னதாக தனது மாமியாரின் வீட்டில் வசித்து வந்த பங்கஜ் குமார், காவல்துறையினர் தண்டனை கண்டறிந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார். செல்போனை உபயோகம் செய்தால் சிக்கிக்கொள்வோம் என்பதை தெரிந்துகொண்டு, கடந்த பல மாதங்களாக செல்போன் உபயோகம் செய்யாமலேயே டெல்லியை சுற்றிவந்துள்ளார்.

சிக்கியது எப்படி?: இதனிடையே காவல்துறையினர் பங்கஜ் குமாரை கைது செய்வதற்காக, அவரது உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து மேற்குவங்கம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஜம்மு காஷ்மீர் என பல மாநிலங்களுக்கு குற்றவாளியை தேடி வலை வீசி இருந்தனர். சமீபத்தில் குற்றவாளியான பங்கஜ்குமார் முன்ஜாமின் கேட்டு வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றத்தை நாடிய தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர் பங்கஜகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.

குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்: விசாரணையில் அவர் செல்போனை பயன்படுத்தாமல் டெல்லியிலேயே கிடைத்த வேலையை செய்து பிழைப்பை நடத்தி வந்ததும், நான்கு மாதங்களாக கோகுல் மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்ததும் உறுதியானது. காவல்துறையினர் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி கண்டறிந்து இருக்கின்றனர். அவரிடம் நடந்த விசாரணையில், கடந்த ஆறு ஆண்டுகளாக தமன்னாவுடன் லிவிங் டுகெதர் முறையில் குடித்தனம் நடத்தி வந்த நிலையில், அவர் முழுவதுமாக தன்னுடன் குடும்பம் நடத்த வற்புறுத்தியதால் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பங்கஜ் குமாரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.