Visual from Video (Photo Credit: @prabhatsirji X)

டிசம்பர் 07, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, மந்திராலயா பகுதியில், சம்பவத்தன்று பிரதாப் திவாரி என்பவர் தனது எலக்ட்ரிக் காருக்கு சார்ஜ் ஏற்ற காத்திருந்துள்ளார். அங்கு முன்னதாகவே வாகனங்கள் இருந்ததால், தனது காரை சார்ஜிங் நிலையத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு சென்றதாக தெரியவருகிறது.

ரூ.972 அபராதம்: இதனை கவனித்த போக்குவரத்து அதிகாரிகள், எலக்ட்ரிக் காருக்கு பார்க்கிங் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்தியதாக அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர். ரூ.972 அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச்செல்ல, அதன் உரிமையாளர் பிரதாப் திவாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாய்சாவுடால் விட்ட பிரதாப் திவாரி: ஆனால், அவரோ அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, அபராதம் விதித்த காவலர்களை பார்த்து வசூல் வேட்டைக்காரர்கள் என வீடியோ எடுத்தவர் வாய்சாவுடால் விட்டார். மேலும், அபராதத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து சென்ற நிலையில், இவற்றை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டு நியாயம் கேட்டுள்ளார். Google Removes Scam Loan Apps: கடன் வழங்குவதாக இந்தியர்களை மிரட்டி, ஏமாற்றிய கந்துவட்டி லோன் செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடி நீக்கம்: கூகுள் தடாலடி செயல்.! 

விசாரணையில் இறங்கிய அதிகாரிகள்: இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, மும்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், சம்பந்தப்பட்ட பிரதாப் திவாரியின் மீது குற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சார்ஜிங் பாயிண்டில் ஒரு முறை 6 வாகனங்களுக்கு மட்டுமே சார்ஜ் ஏற்றமுடியும் என்ற நிலை இருந்துள்ளது.

2 மணிநேரம் எங்கே சென்றார்?: இதனால் ஏழாவது நபராக காத்திருந்த திவாரி, தனது காருடன் காத்திருக்கவில்லை. மாறாக வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அங்கிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். பின்னர், மீண்டும் 4 மணிக்கு வந்தபோது தனது காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிகாரிகளை கடிந்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

அபராதம் விதித்தது சரியே: ஆதாரப்பூர்வமாக உண்மையை கண்டறிந்த காவல் துறையினர், திவாரியின் ட்விட் பதிவுக்கு பதில் தெரிவித்து இருக்கின்றனர். மேலும், சட்டப்படியான விசாரணை நடந்து, சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தயைகூர்ந்து உடன்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். அரசு அதிகாரியிடம் அவதூறாக பேசியதாக திவாரிக்கு எதிராக வழக்கு பாயலாம் என தெரியவருகிறது.