ஆகஸ்ட் 19, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள மாதவரம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தன் (வயது 55). ஆனந்தனின் மனைவி சரளா. தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஆனந்தன் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் காவல்துறை உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகள் பெருங்குளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே மூத்த மகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த பெற்றோர் திருமணத்திற்காக வரன் பார்த்து நிச்சயதார்த்த ஏற்பாடுகளையும் செய்ததாக கூறப்படுகிறது. வானிலை: விருதுநகர், தேனி உட்பட 4 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
மகள் தற்கொலை முயற்சி:
ஆனால் திருமணத்தில் பெண்ணுக்கு விருப்பமில்லை. இதனால் தனக்கு திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் கூறியுள்ளார். இருப்பினும் பெற்றோர் கட்டாயப்படுத்தவே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மீட்டு பெற்றோர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. மகளின் தற்கொலை முடிவால் மிகுந்த மனவேதனை அடைந்த ஆனந்தன் நேற்று மதியம் கொளத்தூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை:
அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு படுக்கையறைக்கு சென்று உறங்கி விட்டு வருவதாக கூறியவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்த போது மின்விசிறியில் ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி விஷயம் தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தற்கொலை செய்துகொண்ட ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.