ஆகஸ்ட் 03, ஆந்திர பிரதேசம் (Andhra Pradesh): ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டம் பல்லிகுராவா பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிரானைட் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் வழக்கம் போல தொழிலாளர்கள் காலை 9 மணியளவில் வேலை செய்ய தொடங்கியதாக தெரிய வருகிறது. அப்போது பாறைகளை உடைப்பதற்காக வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட நிலையில், வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். IBPS Clerk Recruitment: வங்கிகளில் கிளர்க் வேலைவாய்ப்பு.. 10,277 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
உயிருக்கு போராடும் தொழிலாளர்கள் :
பலரும் படுகாயமடைந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியை மேற்கொண்டனர். மேலும் உயிருக்கு போராடியவர்களை நர்சரோபேட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.