4 year old girl Falls From 12th Floor (Photo Credit : @Shehl X)

ஜூலை 26, மகாராஷ்டிரா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வசாய் பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 4 வயதுடைய அன்விகா பிரஜாபதி என்ற பெண் குழந்தை இருக்கிறது. சம்பவத்தன்று தனது குடியிருப்பில் இருந்து குழந்தையுடன் வெளியே செல்ல தயாராகிய தாயார் தனது மகளை ஜன்னல் அருகே உட்கார வைத்திருந்தார். சுட்டித்தனமாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தாய் காலனி மாட்டும் போது ஜன்னல் அருகே அமர்ந்திருந்தது. பிரிட்ஜில் வைத்ததால் விஷமான சிக்கன், மட்டன்.. பறிபோன உயிர்.. குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.! 

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை :

அப்போது தாய் காலனியை மாட்டிக்கொண்டிருந்த நிலையில், குழந்தை பெட்டியில் இருந்து எழுந்து ஜன்னலில் உட்கார முயற்சித்துள்ளது. இந்த நிலையில் ஜன்னலில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாத காரணத்தால் 12ஆவது மாடியில் இருந்து குழந்தை தவறி விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்த குழந்தை துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துடிதுடித்து பறிபோன உயிர் :

இதன் அதிர்ச்சி காட்சிகளும் வெளியாகி உள்ளன. தாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுமி தவறி விழுந்தது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பதற வைத்துள்ளது.

சிறுமி 12வது மாடியில் இருந்து விழுந்த பதறவைக்கும் காட்சிகள்: