பிரிட்ஜில் வைத்ததால் விஷமான சிக்கன், மட்டன்.. பறிபோன உயிர்.. குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.!

ஹைதராபாத்தில் முன்தினம் சமைத்த இறைச்சியை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

பிரிட்ஜில் வைத்ததால் விஷமான சிக்கன், மட்டன்.. பறிபோன உயிர்.. குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.!
Hyderabad Man Died After Eating Refrigerated Leftover Meat (Photo Credit : Youtube)

ஜூலை 26, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநில போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வருபவர் ஶ்ரீனிவாஸ் யாதவ். சம்பவத்தன்று இவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலி தாங்க இயலாமல் ஶ்ரீனிவாஸ், அவரது குடும்பத்தினர் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். அப்போது போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். Student Suicide: பள்ளியின் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.! 

வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பறிபோன உயிர் :

அப்போது வழியிலேயே ஶ்ரீனிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் கடந்த 20ஆம் தேதி உள்ளூர் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் கோழி, ஆடு இறைச்சிகளை சமைத்து சாப்பிட்டுள்ளனர். மீதமுள்ள இறைச்சிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாளும் சாப்பிட்டுள்ளனர். இதனால் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவதியடைந்துள்ளனர்.

கெட்டுப்போன இறைச்சியால் உடல்நல பாதிப்பு ?

இதில் ஶ்ரீனிவாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதில் இருவருக்கு உடல்நலம் மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததால் இறைச்சி கெட்டுப்போனதால் உணவு விஷமானதா? அல்லது பிரிட்ஜில் வைத்து உண்டதால் உணவு விஷமானதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 26, 2025 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).