Woman Married to Her Grandson (Photo Credit: @TV9Bharatvarsh X)

ஏப்ரல் 30, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அம்பேத்கர் நகரை சேர்ந்த தம்பதி சந்திரசேகர் - இந்திராவதி (வயது 52). இத்தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சந்திரசேகர், வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த, பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆசாத் (வயது 30) என்ற வாலிபருடன் இந்திராவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதே சமயம், உறவு முறைப்படி ஆசாத் பேரன் முறை ஆகும். இதனால், அக்கம்பக்கத்தினருக்கு இவர்களின் பழக்கத்தில் சந்தேகம் எழவில்லை. குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாப பலி.. சோக சம்பவம்..!

கணவர் கண்டிப்பு:

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த விவகாரம் (Love Affair) சந்திரசேகருக்குத் தெரியவந்துள்ளது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர், இருவரையும் அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். மேலும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருவரும் வயதில் பெரியவர்கள் என்றும், இதில் தலையிட முடியாது என்றும் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பேரனை திருமணம் செய்த பெண்:

இதனையடுத்து, வீட்டில் இருந்து வெளியேறிய இந்திராவதி, ஆசாத்தை திருமணம் செய்துகொண்டார். இருவரும் இந்து முறைப்படி, கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். தனது கணவர் மற்றும் 4 பிள்ளைகளை விட்டுவிட்டு, 52 வயது பெண் 30 வயது பேரனை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.