ஜூன் 29, (Trending Video): திறமை என்பது வயது சார்ந்த விஷயம் இல்லை என்பதை சிறு குழந்தைகள் அவ்வப்போது நமக்கு உணர்த்திவிடும். நாம் கஷ்டப்பட்டு செய்யும் சில விஷயங்கள் குழந்தைகளினால் ஈடுபாடோடு மேற்கொள்ளப்படும்போது அவை எளிதாகிவிடும்.
Ryusei Imai என்ற சிறுவன் மார்ஷியல் கலைகளின் மூலமாக திரைப்பட நடிகராகவும் சர்வதேச அளவில் புகழப்பட்ட புரூஸ்லீயின் மருவுருவம் என்று கவனிக்கப்படுகிறார். இவ்வாறான அசத்திய திறன் உள்ள குழந்தைகளும் இவ்வுலகில் வாழுகிறார்கள்.
ஜிம்னாஸ்டிக் விளையாட்டு என்பது இன்றளவில் சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது. மனநிலை, வலிமை, நெகிழ்வுத்தன்மை, சுறுசுறுப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றை உடலின் அம்சத்தில் பொருத்தி ஒருநிலைப்படுத்தி விளையாடும் விளையாட்டு இதுவாகும்.
Holy sh!t - this kid is epic 🤯 pic.twitter.com/KB6J1qvfij
— CCTV IDIOTS (@cctvidiots) June 28, 2023
ஜிம்னாஸ்டிக்ஸில் ஈடுபட்டால் கைகள், கால்கள், தோள்கள், முதுகு, மார்பு மற்றும் வயிற்று தசைக் குழுக்களின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். இவ்விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம்பெற்றுகிறது.
இந்த நிலையில், சிறுவன் ஒருவன் அசால்ட்டாக தனது வீட்டருகே இருக்கும் கம்பியை பிடித்து ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.