ஆகஸ்ட் 30, ஆவடி (Chennai News): சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே, அவ்வப்போது மோதல் சம்பவங்கள் தொடருகிறது. இவை ரூட் தல (Route Thala) என்ற பெயரில் பேருந்து பயணங்களில் இருந்து, இரயில் பயணங்கள் வரை தொடருகிறது. ரூட் தல என்ற பெயரில் பட்டா கத்தியுடன் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். ஒருசில நேரம் அவர்களின் எதிர்காலம் கருதி கண்டித்து அனுப்பி வைக்கின்றனர். எனினும், இன்றளவில் இருக்கும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு ட்ரெண்டிங், கெத்து என அடாவடி செய்து வரும் மாணவர்களின் செயல்பாடுகளை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில், சென்னை (Chennai MTC Bus) மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 41டி மந்தைவெளி முதல் ஆவடி (41D Avadi to Mandaveli) வரை பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. Trichy NIT: கல்லூரி மாணவி பலாத்கார முயற்சி: கயவனுக்கு ஆதரவாக விடுதி வார்டன்.. திருச்சியில் விடியவிடிய மாணவ-மாணவிகள் போராட்டம்.!
கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
இந்த பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள், ரூட் தல என்ற பெயரில் பிற மாணவர்களை தாக்குவது, பட்டா கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை கண்டிக்கும் காவல்துறை அதிகாரியுடன் பேசுவதை வீடியோ எடுத்து வைத்தும், சமூக வலைத்தளங்களில் பின்னணி பாடலுடன் அதனை கெத்தாக எண்ணி வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். இதனால் சர்ச்சை செயலில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவு செய்த சமூக வலைதள வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவுக்கு ரூட் தல விவகாரத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்து லைக்குகளை குவித்து வருகின்றனர் .
மாணவர்கள் பதிவிட்ட சர்ச்சை வீடியோ இதோ:
அந்த 41d ஆவடி பஸ்ஸையாவது கேன்சல் பண்ணி விடுங்கையா .. ஒரு காலேஜை கன்ட்ரோல் பண்ண முடியாதா .. இதை வேற இன்ஸ்டாவுல போட்டு ஆயிரக்கணக்குல ப்யர் விடறானுங்க .. @tnpoliceoffl pic.twitter.com/0Q1BFZ3JdA
— 🅿️🅰️🅱️L🅾️ 🫶🫶 (@pablo_twtz) August 29, 2024