Rape File pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 27, தேனாம்பேட்டை (Chennai News): சென்னையில் உள்ள தேனாம்பேட்டை (Teynampet) பகுதியில், விகே கடல் மீனவன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இதனை நடத்தி வருபவர் கெனிட் ராஜ். தனது கடைகளுக்கு வரும் யூடியூபர்களிடம் அள்ளிவிட்ட கதைகளின் காரணமாக பிரபலமான நபர், மந்தைவெளி, மாதா சர்ச் சாலை பகுதியில் உள்ள ஆட்டுக்குட்டி சபையில் போதகராவும் ராஜ் செயல்பட்டு வந்துள்ளார். இவரின் சபைக்கு 26 வயதுடைய இளம்பெண், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்று பிரார்த்தனை செய்து, போதகரான ராஜிடம் ஆசிவாங்கிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

குழந்தைகளை கொலை செய்திடுவதாக மிரட்டல்:

இதனிடையே, சில நாட்களாக பெண் சர்ச்சுக்கு செல்லாத நிலையில், மீண்டும் சென்றபோது தான் மனரீதியான உளைச்சலில் இருக்கிறேன் என கூறியுள்ளார். உடனடியாக உன் உடலில் கேடான ஆவி இருக்கலாம் என கூறியவர், வீட்டுக்கு வா ஆவியை எடுக்கிறேன் என அழைப்பு விடுத்துள்ளார். பெண்ணுக்கு எதோ தவறாக உணர, அவர் வீட்டிற்கு வர இயலாது என தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயம் போதகர் ராஜுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த, பெண்ணுக்கு தொடர்புகொண்டு உனது கணவர், குழந்தைகளை கொலை செய்திடுவேன் என மிரட்டி இருக்கிறார். Pudukkottai: அஞ்சலக கணக்கில் வரவு வைக்காமல் மெகா மோசடி; ஏழைகளின் வயிற்றில் அடித்த ஊழியர்.. கண்ணீர் குமுறல்.! 

கைது செய்து சிறையில் அடைப்பு:

போதகரின் மிரட்டலால் பதறிப்போன பெண்மணி, கடந்த டிச.16 அன்று ராஜின் வீட்டிற்கு சென்றுள்ளார். பிசாசை விரட்டுகிறேன் என ராஜ் பாலியல் தொல்லை கொடுக்கவே, அதிர்ந்துபோன பெண்மணி அங்கிருந்து தப்பி வந்தார். இந்த விஷயம் குறித்து கணவரிடம் தெரிவித்து கதறியழவே, இருவரும் சேர்ந்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கெனிட் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், உண்டாக்கி இருக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3