PIB Fact Check (Photo credit: @PIBFactCheck X)

மே 10, புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போர் காரணமாக இருநாடுகளின் எல்லைப்பகுதியிலும் பதற்றம் நிலவி வருகிறது. பகல்ஹாமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வன்முறை சம்பவத்துக்கு பழிவாங்க, பயங்கரவாதிகளின் நிலைகள் குறிவைத்து தாக்கப்பட்டன. இதில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்‌. பயங்கரவாதிகளுக்கு துணையாக இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி போரைத்தொடங்கியது.

இதனால் இருதரப்பும் தற்போது சரிக்கு சமமாக மோதி வருகிறது. இந்தியா தனது படை பலத்தை காண்பித்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் படையினரால் இந்திய பெண் விமானப்படை விமானி சிறைபிடிக்கப்பட்டதான தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த விசயத்தை முற்றிலும் மறுத்துள்ள இந்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம், பொய்யான தகவலை பகிர வேண்டாம். போர் சூழலில் இவ்வாறான விசமத்தன விசயங்களை செய்தால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது‌.