மே 10, லடாக் (Ladakh): இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே நிலநடுக்கங்கள் அதிகம் உணரப்படுகின்றது. துருக்கி-சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின், ஆசியாவில் இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நாடுகளை மையமாக கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. அதனை உறுதி செய்யும்பொருட்டு சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. PM Modi Mourning On Sivakasi Fireworks Factory Accident: 10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து; பிரதமர் மோடி இரங்கல்.!
குமுறிக்கொண்டு இருக்கும் பசுபிக் ரிம்: இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளை கடலுக்கடியில் ஒன்றிணைக்கும் பசுபிக் ரிம் எனப்படும் பசுபிக் நெருப்பு வளையத்திலும் ஏற்படும் நிலநடுக்கம் அவ்வப்போது ஜப்பான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளை தாக்கி வருகிறது. இவை எப்போதும் மிகப்பெரிய அளவிலான பூகம்பமாக உருவாகி மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதனால் பேரிடர்களை சமாளிக்கும் திறனை ஜப்பான் அதிகம் உபயோகம் செய்து வருகிறது. பிற நாடுகளும் அதற்கு தயாராகி வருகின்றன. பசுபிக் ரிம் பகுதியில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கடும் நிலநடுக்கம் உணரப்பட்டால், அதனால் சுனாமி அலைகள் உருவாகும் பட்சத்தில் அது இந்தியாவையும் தாக்க வாய்ப்புகள் உள்ளன.
லடாக் (Ladakh) பகுதியில் நிலநடுக்கம்: இந்நிலையில், இன்று காலை 07:22 மணியளவில், லடாக்கில் உள்ள கார்கிலில் (Kargil Earthquake) இருந்து 346 கி.மீ வடக்கு வடமேற்கு திசையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தனது அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
Earthquake of magnitude 4.3 hit 346km NNW of Kargil at about 7:22 am: National Center for Seismology (@NCS_Earthquake) pic.twitter.com/Egpv4NsfNs
— Press Trust of India (@PTI_News) May 10, 2024