
மார்ச் 09, நாகர்கோவில் (Kanyakumari News): தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுப்போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போதையை போக்குவரத்துத்துறை பல்வேறு புதிய முன்னெடுப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. புதிய பேருந்துகள், தொழில்நுட்ப முன்னேற்றம், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் என பல வசதிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, அரசுப்பேருந்து ஒன்று, உடைந்த கதவுடன் ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. வானிலை: வெயிலின் தாக்கத்தை குறைக்க வருகிறது மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. நாளைய வானிலை இதோ.!
துறை ரீதியான விசாரணை நடக்கிறது:
தநா 74 என் 1886 பதிவெண் கொண்ட, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டத்துக்கு உட்பட்ட பேருந்து, கதவு உடைத்த நிலையில் இயக்கப்பட்டது. ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட பேருந்தின் கதவு, பக்கவாட்டு பகுதியில் தொங்கியது. இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அரசு போக்குவரத்துத்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
கதவு உடைந்த நிலையில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து:
தமிழக அரசு பேருந்தின் அவல நிலை. விடியல் சாதனை 🥲🥲
இன்னும் கொஞ்சம் நேரத்துல கொத்துஸ் மணிப்பூர்ல பஸ்ல ஏறி பாருங்கனு வருவாங்க 😒🤨 pic.twitter.com/pZZdaTdgVq
— JACK (@Iam_jack_son) March 9, 2025