ஆகஸ்ட் 23, சென்னை (Social Viral): இந்தியாவில், குறிப்பாக வடஇந்தியாவில் மிகப்பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று குலாப் ஜாமுன் (Gulab jamun). குலாப் ஜாமின் இந்தியா மட்டுமல்லாது வங்கதேசம், பாகிஸ்தான் உட்பட ஆசிய கண்டங்களில் உள்ள நாடுகளில் பிரபலமான இனிப்பு ஆகும்.
பெரிசியா என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய ஈரானில் இருந்து படிப்படியாக இந்தியாவுக்குள் குலாப் ஜாமுன் அறிமுகம் செய்யப்பட்டதாகவும், முகலாய மன்னர் ஷாஜகானின் சமையலர் எதிர்பாராமல் கண்டுபிடித்ததே குலாப் ஜாமுன் எனவும் பல கூற்றுகள் இதுகுறித்து இருக்கின்றன. PM Modi Respect National Flag: இதுதான் தேசப்பற்று..! காலடியில் கிடந்த தேசியக்கொடியை கையில் எடுத்து வைத்துக்கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் வீடியோ..!
இன்றளவில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும், இந்தியாவில் அதிகம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இனிப்புகளில் முக்கியமானதாக குலாப் ஜாமுன் உள்ளது. முந்தைய காலங்களில் இனிப்பகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட குலாப் ஜாமுன், இன்றளவில் வீடுகளிலும் சமைக்கும் அளவு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவை தனது தயாரிப்பை மக்களிடையே விளம்பரத்தியதன் விளைவு எனவும் சொல்லலாம். இதனால் மாநில வாரியாக முன்பு தயாரிக்கப்பட்ட சில பாரம்பரிய இனிப்புகளும் குறைந்துபோயின. இந்நிலையில், பார்ப்பதற்கு ஐஸ்கட்டி போல இருக்கும் குளோப் ஜாமுன் பெங்களூரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram