JCB Driver Attack (Photo Credit: @Jitendra_Hatwal X)

மே 26, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் (Jaipur) குடியா கிராமத்தை சேர்ந்தவர் தேஜ்பால் சிங் உதாவத். இவர், தனது ஜேசிபி டிரைவரை டீசல் திருடியதாக சந்தேகித்து, அவரை தலைகீழாக ஜேசிபி இயந்திரத்தில் கட்டி வைத்து தொங்கவிட்டு, பெல்ட்டால் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 3 மாதங்களுக்கு முன் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. கணவர், மாமியார் சித்ரவதை.. 22 வயது இளம்பெண் வீடியோ பதிவிட்டு தற்கொலை..!

குற்றவாளி கைது:

இதுகுறித்த விசாரணையில், தேஜ்பால் மீது ஏற்கனவே ராய்ப்பூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்டவிரோத மணல் திருட்டு உட்பட பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ வெளியானதும் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: