College Students Dangerous Stunt on Train (Photo Credit: @aajtak X)

ஏப்ரல் 09, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் அதிவேக மின்சார ரயிலின் மேற்கூரையில் பயணித்து, ஆபத்தான முறையில் சாகசங்களைச் (Stunt Video Viral) செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'ரூட் தல' என்று அழைக்கப்படும் இந்த ஆபத்தான போக்கில், சில மாணவர்கள் ரயில்களின் கூரைகளிலும், பக்கவாட்டில் உள்ள கதவுகளிலும் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை அடையாளம் காண ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கலியுகத்தில் இப்படி ஒரு நேர்மை... சிறுமிகளுக்கு குவியும் பாராட்டு..!

ஆபத்தான ரயில் பயணம்:

இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இன்றைய இளம் தலைமுறையினரிடையே அதிகரித்துள்ள ரீல்ஸ் மோகம், குற்ற சம்பங்களில் ஈடுபட தூண்டும் விதமாக உள்ளது. இதில், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கையும் விடுத்து வருகிறார்கள். எனவே, தமிழக காவல்துறை இதுபோன்ற ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுவோர்க்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ இதோ: