ஜூன் 14 (Viral Video): பனிப்பாறைகள், பனிமலைகள் தனக்குள் பல மர்மங்களை கொண்டவை ஆகும். நாம் பனிப்பிரதேசங்களில் சீரான வெண்போர்வை போர்த்திய வழித்தடத்தில் நடப்பது போல தோன்றினாலும், நமது ஒவ்வொரு காலடியில் கீழே நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில், பனிச்சறுக்கு வீரர் ஒருவர், உயரமான மலைப்பகுதியில் இருந்து கீழ்நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார். அப்போது, அவர் மர்மம் கொண்ட பனிப்பாறை இடுக்கில் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறார்.
இந்த வீடியோ அவரின் கேமிராவில் பதிவாகி பதைபதைப்பை தருகிறது. நாம் அறியாத பல மாயங்கள் இவ்வுலகில் நமது கால்களுக்கு கீழே இருக்கின்றன. அவற்றின் மீது நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வீடியோ உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Watch as a skier falls into a glacier 😳 pic.twitter.com/fIkPerAgzW
— Oddly horrifying (@OddlyHorrifying) June 13, 2023