ஜூன் 28, நீலகிரி (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளமும் (Flooding River) பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், கூடலூர் தர்மகிரி பகுதியில் பாய்ந்து சென்ற காட்டாற்று வெள்ளத்தை கடக்க, மூன்று யானைகள் முயன்றன. அதில் ஒரு யானைக்குட்டி (Elephant) முதலில் ஆற்றில் இறங்கி சென்றது. அப்போது திடீரென ஆற்றில் நீரோட்டம் அதிகரிக்க, தடுமாறிய யானை கவிழ்ந்து கீழே விழுந்தது. சில நொடிகள் நீருக்குள்ளும் மூழ்கியது. International LGBT Pride Day 2024: "எங்கேயும் காதல்… முகங்களையோ உடல் நிறங்களையோ.. இது பார்க்காதே பார்க்காதே.." சர்வதேச எல்ஜிபிடி தினம்..!
இதனை கண்ட இரண்டு பெரிய யானைகளுடம் செய்வதறியாமல் கரையோரம் சென்று சுற்றி திரிந்தன. பின்னர் சிறிது தூரத்தில் பாறைகள் அதிகமாக இருந்த நிலையில், அதனை பயன்படுத்திக் கொண்ட யானை தட்டு தடுமாறி வெள்ளத்திலிருந்து தப்பி கரைக்கு சென்றது. தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.
நீலகிரி:-கூடலூர் தர்மகிரி பகுதியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை போராடி கரையை கடந்த காட்சி.@gurusamymathi @kovaikarthee @vijay_vast @PrasanthV_93 @ASubburajTOI @supriyasahuias @SudhaRamenIFS @Senthil_TNIE #nilgiris#elephant pic.twitter.com/1uk4ofr3bl
— Srini Subramaniyam (@Srinietv2) June 28, 2024