ஏப்ரல் 26, பிரேசிலியா (World News): பிரேசில் நாட்டில் உள்ள போர்டோ அலெஃரே நகரில், காரோயா பிளூஸ்டா என்ற தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தற்போது வீடு இல்லாதோர் மற்றும் ஏழை-எளிய மக்கள் தங்கி இருக்கின்றனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விடுதியில் தங்கியிருந்த 11 பேர் பரிதாபமாக தீயின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து கிட்டத்தட்ட 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். Frank Tyson Last Minute Video: உயிருக்கு துடிதுடித்த கதறலையும் கேட்காது அதிகாரிகளின் அலட்சியம்.. கறுப்பினத்தவர் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி காட்சிகள்.!
தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்ட காரணத்தால், அவர்களின் உடல் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள ரியோ ஜெரண்டே டூ சுல் ஆளுநர் எடுர்டோ லெய்ட், காயமடைந்தோருக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.