ஆகஸ்ட் 25, புதுடெல்லி (New Delhi): தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் (Johannesburg) நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகள் (BRICS Summit 2023) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தற்போது ஐரோப்பாவில் (Europe) இருக்கும் கிரீஸ் (Athens, Greece) நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகருக்கு சென்றுள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் (Chinese President Xi Jinping) ஆகியோர் சந்தித்துக்கொள்ளும் தருணம் வந்தது. அப்போது, பிரதமரிடம் சீன அதிபர், இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வளர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), லடாக் எல்லை விவகாரம் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்து, பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டுகோள் வைத்துள்ளார். எல்லையில் பாதுகாப்பை இரண்டு நாடுகளும் பேணிக்காக்க உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. US Forest Fire Video: நெஞ்சை பதறவைக்கும் காட்டுத்தீ.. உயிரை கையில்பிடித்து அவசர அவசரமாக வெளியேறும் மக்கள்.. விபரம் உள்ளே.!
லடாக் பகுதியை பொறுத்தமட்டில், கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே சீன இராணுவம் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்து பிரச்சனை செய்து வருகிறது. அது தொடர்பான பல சர்ச்சை மோதல் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2020ல் ஜூன் மாதம் 15ம் தேதி எல்லையை தாண்டி வந்த சீன இராணுவத்திடம் பேச்சுவார்த்தைக்கு சென்ற இந்திய இராணுவ வீரர்கள் பயங்கர ஆயுதத்தால் தாக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர், சீன வீரர்களின் செயலை முதலில் இந்திய தரப்பு எதிர்பார்க்கவில்லை என்றாலும், மறுநொடியே களம் மாறியது.
இந்திய இராணுவத்தின் பதில் தாக்குதலில் சீன தரப்பில் 40 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இன்று வரை அவை சீனாவால் ஒப்புக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தான் பலமட்ட பேச்சுவார்த்தைகள் சீன-இந்திய தரப்பில் எல்லை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.