டிசம்பர் 24, சென்னை (Chennai): தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வந்தவர் போண்டாமணி (Bonda Mani). கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஷ்காரன் திரைப்படம் வாயிலாக தனது திரை வாழ்க்கையின் புதிய முன்னேற்றத்தை கண்ட போண்டா மணி, அதே ஆண்டில் வெளியான ஆறு திரைப்படத்திலும் நடித்து கவனத்தைப் பெற்றார்.

போண்டாமணியாக மாறிய காளீஸ்வரன்: நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த போண்டாமணிக்கு இயற்பெயர் காளீஸ்வரன். இலங்கை தமிழரான போண்டா மணி, கடந்த 1980களில் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்தார். பின் படிப்படியாக திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து, அதன் தொடர்ச்சியாக தனக்கென ஒரு அங்கீகாரத்தையும் பெற்றார்.

அரசியல் வருகை: தற்போது வரை 270க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். திரைப்படங்கள் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சிக்காக பணியாற்றி வந்தார். பல மேடைகளில் இவரின் சரவெடிப்பேச்சுகளை கேட்க கூட்டமே காத்திருந்தது. Chennai RMC Statement: சென்னை வானிலை ஆய்வு மையம் மீது வைக்கப்பட்ட சரமாரி குற்றசாட்டுகள்: விளக்கம் அளித்த நிர்வாகம்.! 

கிட்னி செயலிழப்பு: கடந்த சில ஆண்டுகளாகவே கிட்னி செயலிழப்பு காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்த போண்டாமணி, பலரின் உதவியை பெற்று தற்போது வரை உடல் நலம் தேறி வந்தார். இந்நிலையில், தற்போது பொழிச்சலூரில் உள்ள வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நேரில் அஞ்சலி: அங்கு போண்டா மணியின் உயிர் பிரிந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போண்டா மணியின் மறைவு திரையுலகினரை சோகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு விரைந்துள்ளனர்.