Baby Hand File Pic (Photo Credit: @LatestLY X)

மார்ச் 16, காரமடை (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் வசித்து வந்தவர் அனிதா (வயது 28). இவருக்கு ஆண் குழந்தை இருக்கிறது. இதனிடையே, தனது குழந்தை மாயமாகிவிட்டது, குழந்தையை கண்டறிந்து தர வேண்டும் என துடியலூர் காவல் நிலையத்தில் அனிதா புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குழந்தையை தேடி வந்தனர். அனிதா கொடுத்த தகவலில் விசாரணை முன்னேற்றம் கிடைக்காத நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியபோது, கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை வினை செய்து நடனமாடியது தெரியவந்தது. மேலும், அனிதாவின் கள்ளக்காதலன் என அறியப்படும் மோகன்ராஜுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. Sankarankovil Accident: சாலையோர புளியமரத்தில் காத்திருந்த எமன்.. கார் வாங்க ஆசையாக சென்றவர் சம்பவ இடத்திலேயே பலி.! 

குழந்தை விற்பனை என்? வெளியானது தகவல்:

அதிகாரிகள் நடத்திய விசாரணையைத்தொடர்ந்து, கன்னியாகுமரியில் வசித்து வரும் தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்ட 1 வயதுடைய ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தை கோவைக்கு அழைத்துவரப்பட்டது. பின் இந்த விஷயம் குறித்து குழந்தையின் தாய் அனிதா (வயது 28), பெரம்பலூர் மாவட்டம் கீழ்ப்பிள்ளையனூர் கிராமத்தை சேர்ந்த கள்ளக்காதலன் மோகன்ராஜ் (வயது 29), கௌண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற ரஞ்சிதா (வயது 32), சிங்கநல்லூரைச் சேர்ந்த சுஜாதா (வயது 32), புகழம்மாள் (வயது 30), லில்லி (வயது 40), சேலம் வாழப்படியைச் சேர்ந்த ஷோபா (வயது 45) ஆகிய 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதாவது, கள்ளக்காதலில் குழந்தை பிறந்த காரணத்தால், அது எதிர்காலத்தில் தனக்கும் அவமானம், குழந்தைக்கும் இழிவு என கருதிய அனிதா, மோகன்ராஜ் உதவியுடன் குழந்தையை குமரி தம்பதிக்கு ரூ.2 இலட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். குழந்தையை விற்பனை செய்தபின்னர் அனிதா - மோகன்ராஜ் இடையே தகராறு உண்டாக, அனிதா குழந்தை மாயமாகியது என புகார் அளித்துள்ளர். இந்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது.