Sangarankovil Accident (Photo Credit: @PolimerNews X)

மார்ச் 15, சங்கரன்கோவில் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி, அய்யாபுரம் பகுதியில் வசித்து வருபவர் வேலுசாமி. இவரின் மகன் மணிகண்டன் (வயது 44). மணிகண்டன் தனது சொந்த தேவைக்காக கார் வாங்கலாம் என நினைத்துள்ளார். இதற்காக சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் கார் ஷோரூமுக்கு சென்று, காரின் விலை பட்டியல் தொடர்பான தகவலைபெற்றுள்ளார். பின்னர் சங்கரன்கோவில் - புளியங்குடி சாலையில் வந்துகொண்டு இருந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்தபோது, அங்குள்ள வீரிருப்பு கிராமம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. திடீரென அவரின் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்ற நிலையில், புளியமரத்தில் மோதி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். Sangagiri Accident: மனைவி கண்முன் தலை நசுங்கி உயிரிழந்த கணவர்.. சாலையை கடக்க காத்திருந்தவருக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.! 

சம்பவ இடத்திலேயே பலியானார்:

இதில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர், சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டார். மேலும், அவர் சரிவர தலைக்கவசம் அணியவில்லை என்பதால், மணிகண்டன் கீழே விழுந்தபோது, தலைகவசம் தனியாக உருண்டு ஓடியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மணிகண்டனை சோதித்தபோது மரணம் உறுதி செய்யப்பட்டதால், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.