ஏப்ரல் 09, புதுடெல்லி (New Delhi Crime News): குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியை சேர்ந்தவர் விபுல் டைலர் (27). இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். கொலை உட்பட 10 க்கும் மேற்பட்ட நிலுவை வழக்குகள் விபுலின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இவர் டெல்லியில் உள்ள தாபிரி பகுதியில் தங்கி இருந்தார். இவருடன், ருக்ஹ்ர் ரியா என்ற பெண்மணி லிவிங் டுகெதர் காதலியாக வாழ்ந்து வந்துள்ளார்.
கொலை (Living Together Partner Killed) செய்யப்பட்ட லிவிங் பார்ட்னர்: இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக ஒன்றாக வசித்து வந்த நிலையில், பெண்மணி காதலரிடம் திருமணம் குறித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஒன்றாக வாழ்வதற்கு சம்மதித்த விபுல், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் 3ம் தேதி இவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தில் பெண்மணி கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தனது மகளுக்கு பலமுறை போனில் தொடர்பு கொண்ட தந்தை, அவர் போனை எடுக்காத காரணத்தால் அவரின் இருப்பிடத்திற்கு சென்றுள்ளார்.
காவல்துறை தீவிர விசாரணை: அங்கு மகள் சடலமாக கிடந்த நிலையில், தாப்ரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை சோதனையிட்டபோது அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. பின் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். WhatsApp Scam Call Alert: வாட்சப் வழியாக புதிய மோசடி; மக்களே கவனமாக இருங்க... மத்திய அரசு எச்சரிக்கை..!
தனிப்படையின் அதிரடி செயல்: விசாரணையில், லிவிங் டுகெதர் முறையில் இவர்கள் இருவரும் வாழ்ந்து வந்ததும், திருமணம் தொடர்பான வற்புறுத்தல் காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றதும் தெரியவந்தது. குற்றவாளி கொலையை செய்துவிட்டு ராஜஸ்தான் மாநிலம் தப்பி சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளின் பேரில் குற்றவாளியை துரத்திச்சென்ற தனிப்படை காவல் துறையினர், உதய்பூரில் அவசர ஊர்தியில் தப்பிச்சென்ற விபுலை அதிரடியாக கைது செய்தனர்.
1400 கி.மீ பயணித்து குற்றவாளி கைது: காவல்துறையினர் தன்னை கைது செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் 1400 கி.மீ தூரம் தப்பிச்சென்ற விபுல், தனது பயணத்தை ஆங்காங்கே மாற்றி அதிகாரிகளை குழப்படியிலும் ஆழ்த்தி இருக்கிறார். இறுதியில் குற்றம் செய்த நபர் அதிரடியாக தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய விபுல், அதனை உபயோகம் செய்யும் பழக்கத்தையும் கொண்டுள்ளார்.