Chennai Bike Accident (Photo Credit: YouTube)

மே 27, தேனாம்பேட்டை (Chennai News Today): சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில், நள்ளிரவு நேரத்தில் சாலையில் எதிரெதிர் திசையில் வந்துகொண்டு இருந்த இருசக்கர வாகனங்கள் எதிர்பாராத விதமாக மோதி நேற்று முன்தினம் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நேரில் விரைந்து கால் முறிவு ஏற்பட்ட நபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோகனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழுக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் விபத்தில் சிக்கி கீழே விழுந்தபோது பின்னந்தலையில் காயம் ஏற்பட்டு பலியானது தெரியவந்தது. வானிலை: தொடக்கமே அமர்க்களம்.. கொட்டித்தீர்க்கும் மழை.. இன்று மிகப்பெரிய அலர்ட்.! 

நொடியில் நடந்த விபத்து:

மேலும், எதிர்திசையில் மதுபோதையில் வாகனத்தை இயக்கி வந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதாவது, சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த அழகேசன் (வயது 24) என்பவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. சாலையில் இருந்த பள்ளத்தில் வாகனத்தை செலுத்தாமல் இருக்க எதிர்திசையில் வந்த வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதி இந்த சோகம் நடந்துள்ளது. வாகனத்தை அலட்சியமாக இயக்கியதாக சரவணன் (வயது 36) என்பவர் கைது செய்யப்பட்டார். போதையில் சரவணன் வாகனத்தை இயக்கியது உறுதி செய்யப்பட்டதால், அவரின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பதறவைக்கும் காட்சிகள்:

வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி

தலைக்கவசம் அணிவோம்! சாலை விபத்துகளில் உயிரிழப்பை தவிர்ப்போம்!