பிப்ரவரி 02, உளுந்தூர்பேட்டை (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulunthurpet) மிக முக்கிய பரபரப்பான பகுதிகளில் ஒன்றாக அம்மாவட்டத்தில் அமைந்துள்ளது. தினமும் உளுந்தூர்பேட்டை நகரில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு பேருந்து போக்குவரத்து இயக்கப்படுகிறது. மேலும், சுற்றுவட்டார கிராமங்களுக்கு முக்கிய நகராக உளுந்தூர்பேட்டை இருப்பதால், மக்கள் பலரும் அத்தியாவசிய விஷயங்களில் இருந்து அனைத்திற்கும் அந்நகரையே நம்பி இருக்கின்றனர். Car Accident: போதையில் விபத்தை ஏற்படுத்திய காரில் தவெக கொடி: வெளுத்துக்கட்டிய பொதுமக்கள்.!
மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் அதிர்ச்சி செயல்:
இதனிடையே, சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரால், மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட நபர் ஒருவர் செங்கலை தூக்கி சாலைகளில் வீசி ரகளை செய்த சம்பவம் நடந்து இருந்தது. இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. அவரை ஏற்கனவே காவல்துறையினர் பலமுறை பிடித்து மனநல காப்பகத்தில் சேர்த்தாலும், அவர் மீண்டும் வந்து இவ்வாறான அசம்பாவித செயலில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபர்:
சாலையில் ஆபத்தான முறையில் சுற்றி வரும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பிடித்து, நிரந்தரமாக மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Video Thanks: https://t.co/NMxDxfUgXi#Kallakurichi | #Ulunthurpet | pic.twitter.com/oTXX0Or4YI
— Sriramrpckanna (@Sriramrpckanna1) February 2, 2025
More Details Awaited....