TVK Party Supporters in Pudukkottai (Photo Credit: @SUnnewstamil X)

பிப்ரவரி 02, திருமயம் (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் பகுதியில், இன்று போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டியானது இன்று நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அப்போது, போட்டி நடைபெறும் பகுதியில் மக்கள் சாலையோரம் நின்று கொண்டு இருந்தனர். அச்சமயம், அங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி பொருத்திய கார் வந்துள்ளது. காரை போதையில் இயக்கிய நபர்கள், பொதுமக்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருந்தனர். TVK Vijay: "போர்‌ யானைகள்‌ பலத்தோடு எதிரிகளை வெல்வோம்‌" - தவெக தலைவர் விஜய்.! 

காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை:

மேலும், அவ்வழியே எதிர்திசையில் வந்த வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கினர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், காரில் இருந்த நபர்களை வெளியே இழுத்தனர். அப்போது, அவர்கள் போதையில் இருப்பது உறுதியான காரணத்தால், அவர்கள் மீது மக்கள் ஆவேசமடைந்து தாக்குதல் நடத்தி இருந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த திருமயம் காவல்துறையினர், விரைந்து வந்து மூவரையும் மீட்டனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களில் சிலர் காயமடைந்த நிலையில், அவர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் லேசான பரபரப்பு சூழலை உண்டாக்கியது.

போதையில் விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியை வெளுத்துக்கட்டிய மக்கள்: