Kanyakumari Electrocution Death (Photo Credit: @mahajournalist X)

மார்ச் 02, இணையம்புத்தன்துறை (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இணையம்புத்தன் துறை கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் விழா நடைபெற்று வரும் நிலையில், நேற்று அலங்கார வளைவு மற்றும் தேர் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது, இரும்பு ஏணியை 4 பேர் எடுத்து வந்தபோது, ஏணி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியது. இதனால் ஏணியில் மின்சாரம் பாய்ந்து, அதனை பிடித்திருந்த நால்வர் மீதும் மின்சாரம் தாக்கியது. 22 வயது ஆன்லைன் காதலருடன் ஓட்டம் பிடித்த 35 வயது மனைவி.. 5 மாதமாக தேடித்திரியும் கணவன்.. பரிதவிப்பில் குழந்தைகள்.! 

நால்வர் மின்சாரம் தாக்கி மரணம்:

இந்த சம்பவத்தில் நால்வரும் ஏணியில் சாய்ந்தபடி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ந்து, உடல் தரையில் பட்டு தீ கிளம்பியதும் நடந்தது. ஊர் மக்கள் முன்னிலையில் பதறவைக்கும் இந்த சோகம் நடந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நால்வரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நால்வர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுக்கு தெரியவந்தது.

முதல்வர் இரங்கல் & நிதிஉதவி அறிவிப்பு:

இதனையடுத்து, உயிரிழந்த விஜயன் (வயது 52), சோபன் (வயது 45), மனு (வயது 42), ஜெஸ்டிஸ் (வயது 35) ஆகியோரின் குடுமப்த்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், உயிரிழந்த நால்வரின் குடும்பத்திற்கும் ரூ.5 இலட்சம் இழப்பு வழங்க உத்தரவிட்டு இருக்கிறார்.

நால்வர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் குறித்த காணொளி: