
ஜூலை 02, கர்நாடகா (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கௌதம்புரா கிராமத்தில் வசித்து வருபவர் ஹுச்சம்மா (வயது 76). மூதாட்டியின் வீட்டின் முன்பு, பக்கத்து வீட்டில் வசித்து வந்த பிரேமா என்ற பெண்மணி குப்பை கொட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மூதாட்டி பிரேமாவிடம் குப்பையை எதற்காக இங்கு கொட்டினாய்? என்று கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிரேமாவுக்கு ஆதரவு அளிப்பதாக பிரேமாவின் குடும்பத்தினர் வந்த நிலையில், மஞ்சுநாத் மற்றும் தர்ஷன் உள்ளிட்டோர் மூதாட்டியிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை.. காதலனின் பகீர் செயலால் துடிதுடித்து பறிபோன உயிர்.!
மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய குடும்பம் :
இதில் குடும்பத்தினர் வந்துவிட்டார்கள் என்று ஆவேசத்தில் செயல்பட்ட பிரேமா, மூதாட்டியை அப்பகுதியில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியிருக்கிறார். இந்த விஷயத்தில் பிரேமாவுக்கு உடந்தையாக மஞ்சுநாத்தும், தர்ஷனும் செயல்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தை அங்கிருந்த நபர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உள்ளூரை சேர்ந்த மக்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆனந்தபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் பிரேமா, மஞ்சுநாத், தர்ஷன் ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மூவரையும் கைது செய்து அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர்.