மே 09, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால், அஹரா ஹில்ஸ் பகுதியைச் சார்ந்தவர் பூபேந்தர ஜோகி (Bhupendra Jogi). இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களை பதிவிட்டு பிரபலமான நபர் ஆவார். உள்ளூரில் சமூக வலைதளங்களில் வைரலாக அறியப்படும் நபராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று (Instagram Influencer Bhupendra Jogi Attacked) இவர் தனது இரு சக்கர வாகனத்தில் மார்க்கெட் பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தபோது, 09:30 மணியளவில் இரண்டு பேர் கும்பலால் வழிமறிக்கப்பட்டுள்ளார். மாஸ்க் அணிந்தபடி வழிமறித்த இரண்டு பேர் கும்பல், பூபேந்திர ஜோகியை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். LSG Owner Intense Conversation with KL Rahul: கே.எல் ராகுலிடம் தோல்வி குறித்து கடும் விவாதம் செய்த லக்னோ அணியின் உரிமையாளர்.!
காயங்களை சரி செய்ய 40 தையல்கள்: உடலில் பல இடங்களில் சரமாரியாக அறுத்து வெட்டு காயங்கள் ஏற்பட்ட நிலையில், உள்ளூர் மக்களால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு, மருத்துவர்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் 40 தையல்களை இட்டு உயிரை காப்பாற்றி இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்விடத்தில் இருந்த சிசிடிவி கேமிராக்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. இவர் எதற்காக? யாரால்? தாக்கப்பட்டார் என்ற விபரங்கள் தெரியவில்லை. சர்ச்சைக்குரிய இரண்டு நபர்கள் கைதான பின்பு அவை தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
Remember Bhupendra Jogi ?
He made a funny video/ reel on Dhruv Rathee. Many Islamist accounts on Instagram abused and threatened him.
Yesterday he was stabbed by two boys.
He got 40 stitches. He is stable now and going under treatment.
Usual suspects!! pic.twitter.com/BgLP5IFzks
— Sunanda Roy 👑 () May 9, 2024