Father Son Dies by Suicide in Bhayandar (Photo Credit: @LoksattaLive X)

ஜூலை 10, பயந்தர் (Maharahstra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பயந்தர் (Bhayandar Railway Station) இரயில் நிலையத்தில், சம்பவத்தன்று இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். பின், அவர்கள் எதிர்திசையில் வந்த இரயில் முன் பாய்ந்து, தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். Bus Rammed into Milk Container: பால் ஏற்றிவந்த லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து; 18 பேர் பலி., 30 பேர் படுகாயம்.! 

பலியான தந்தை - மகனின் விபரம்:

சம்பவ இடத்திற்கு விரைந்த வசாய் இரயில்வே அதிகாரிகள், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தந்தை மகனின் அடையாளத்தை கண்டு தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது ஹரிஷ் மெஹ்தா (60), அவரின் மகன் ஜெய் மெஹ்தா (30) என்பது தெரியவந்தது.

விரார் பகுதியில் இருந்து சர்ச் கேட் வரை செல்லும் உள்ளூர் இரயில்முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.