Nashik Water Crisis (Photo Credit: @ANI X)

ஏப்ரல் 20, நாக்பூர் (Maharashtra News): மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டம், பொரிஷிவாரி கிராமத்தில் கடந்த சில மாதங்களங்கவே கடுமையான தண்ணீர் பஞ்சமானது நிலவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பலரும் அன்றாட தேவைக்காக தண்ணீரை சேகரிக்க பல கிமீ தூரம் பயணிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள கிணற்றிலும் சுனை நீர் வற்றிப்போனதால் தினமும் சிறிதளவு சுரக்கும் நீரையும் குறைந்த அளவிலான பாத்திரத்தில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் சேகரிக்கின்றனர். புதுமணத்தம்பதிக்கு புளூ டிரம் பரிசு.. மணமக்களை ஷாக்கில் ஆழ்த்திய மணமகன் தோழர்கள்..! 

குடிநீர் வேண்டி மக்கள் கடும் அவதி:

இந்த விஷயத்துக்காக படியே சரிவர இல்லாத கிணற்றுக்குள் கயிறு கட்டி பெண்கள் இறங்கி அவதிப்படுகின்றனர். கடந்த காலங்களில் பருவமழை பெய்தாலும், நடப்பு ஆண்டில் பருவமழை பொய்த்ததன் காரணமாக இவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், டேங்கர் வைத்து குடிநீர் விநியோகம் செய்தாலும், மக்கள் அவர்களின் கூடுதல் தேவைக்காக நீரை பெற இயலாத சூழலால் கூடுதல் நீருக்காக இப்படியான செயலை முன்னெடுப்பதாகவும் விவரிக்கின்றன.

தண்ணீர் தேடி பெண்கள் படும் வேதனை: