Gold Smuggling (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 14, மும்பை (Mumbai): வெளிநாடுகளுக்கு வேலை மற்றும் சுற்றுலாவுக்கு செல்லும் நபர்கள், அங்கிருந்து தங்கம் வாங்கி வருவது இயல்பானது எனினும், தனிநபருக்கு என அளவுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் இருந்து தப்பிக்க, பெருநிறுவனங்கள் திருட்டுத்தனமாக திரைமறைவில் தங்கக்கடத்தலை முயற்சிப்பதும் உண்டு.

அப்பாவிகள் கவனமாக இருங்கள்: வெளிநாடுகளில் இருந்து வருவோர், குருவிகள் எனப்படும் நபர்களின் உதவியுடன் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கிறது. சில நேரம் ஆசை வார்த்தைக்கு ஏமாறும் அப்பாவி வழக்கில் சிக்கி தவிக்கும் சூழலும் உருவாகும். இந்நிலையில், மஸ்கத் நாட்டில் இருந்து மும்பை வந்த பயணியின் உடமைகள் சோதிக்கப்பட்டன.

430 கிராம் தங்கம் பறிமுதல்: அச்சமயம், அவர் கொண்டு வந்திருந்த பொம்மை பொருட்களின் அட்டைகள் வழக்கத்தை விட அதிக எடையுடன் இருக்க, அதனை அதிகாரிகள் சோதனை செய்தபோது பேஸ்ட் வடிவிலான தங்கத்தை அட்டையின் மீது ஒட்டி, அதன் மீது ஸ்டிக்கர் வைத்து வந்து தெரியவந்தது. 430 கிராம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.