
பிப்ரவரி 27, தோல்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் (Dholpur Lorry Accident), பாரி, கே.வி.ஏ தேசிய நெடுஞ்சாலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் லாரி ஒன்று பயணம் செய்தது. அதிக பாரம் ஏற்றுக்கொண்ட லாரி, சாலையில் நிலைதடுமாறியவாறு பயணித்தது. ஒருகட்டத்தில், லாரி திடீரென சாலையில் கவிழ்ந்து (Truck Overturns Biker Death) விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். Assam Earthquake: அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!
ஒருவர் பலி., மற்றொருவர் உயிர் ஊசல்:
லாரியின் அடிப்பகுதியில் இளைஞர்கள் சிக்கிக்கொள்ள, விபத்தை கண்டு பதறிப்போன உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இருவரையும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் சில நிமிடங்களில் உயிரிழந்தார். மேலும், மற்றொருவர் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். Young Girl Rape: பேருந்தில் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மர்ம நபருக்கு வலை..!
திருமணத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்:
விபத்து உக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் விபரத்தை சேகரித்தனர். அப்போது, இளைஞர்களில் உயிரிழந்தவர் அரவிந்த் (வயது 20), உயிருக்கு போராடுபவர் கருவா (வயது 19) என்பதை உறுதி செய்தனர். அரவிந்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுனருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் இருவரும், அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, உறவினரின் திருமண விழாவுக்கு பயணித்துள்ளனர். வழியில் இந்த சோகம் நடந்துள்ளது.
லாரி கவிழ்ந்து இருசக்கர வாகன ஓட்டியின் உயிரை பறித்த கொடூர காட்சிகள்:
Rajasthan: Overloaded truck overturns on bike rider, resulting in tragic death.#Rajasthan #Dholpur #Accident pic.twitter.com/vpTgS6GMTK
— Siraj Noorani (@sirajnoorani) February 27, 2025