
ஜூன் 21, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி, வாகைகுளம் பகுதியில் வசித்து வருபவர் காளீஸ்வரி (வயது 32). இவருக்கு திருமணமாகி 8 வயதுடைய மகன் இருக்கிறார். காளீஸ்வரியின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில், மகனுடன் சொந்த ஊரில் இவர் இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் மூலம் சிறுவனுடன் பழக்கம் :
இதனிடையே களக்காடு, தேவநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் பன்றி பண்ணையில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவனுடன் காளீஸ்வரிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளி படிப்பை முடித்து சிறுவன் மேற்படி படிக்காமல் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருக்கும்போது காளீஸ்வரியுடன் மணிக்கணக்கில் சாட்டிங் செய்து வந்துள்ளார். Kanyakumari News: பள்ளி தோழனை நம்பிய பெண் பலாத்காரம்.. நியாயம் கேட்ட பெண் மீது தாக்குதல்.!
சிறுவனுடன் தனிமையில் நெருக்கம் :
சிறுவனின் ஆபாச பதிவுக்கு காளீஸ்வரி கிண்டலடிக்கும் கருத்துக்களை தெரிவித்து இருவரும் ஓராண்டுகளாக பழகி வந்துள்ளனர். இதனிடையே சிறுவனை தன் வசப்படுத்த நினைத்த காளீஸ்வரி, கணவர் வெளியூரில் வேலை பார்ப்பதை சாதகமாக பயன்படுத்தி இரவு முழுவதும் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது வீட்டுக்கும் அழைத்து வந்து சிறுவனுடன் தனிமையில் இருந்துள்ளார்.
மகனை கொலை செய்வதாக மிரட்டல் :
கடந்த இரண்டு மாதங்களாக இந்த சம்பவம் நடந்த நிலையில், தனியாக வீடு எடுத்தும் தங்கியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து தகவலறிந்த காளீஸ்வரியின் கணவர் மனைவிக்கு போனில் தொடர்பு கொண்டபோது பேசிய சிறுவன், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ போகிறோம். மேற்படி தொந்தரவு செய்தால் உங்களது மகனை கொலை செய்து விடுவோம் என மிரட்டி இருக்கிறார்.
போக்சோவில் கைது :
இதுகுறித்து சிறுவனின் தாயாருக்கு தகவல் தெரியவரவே நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காளீஸ்வரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.