Girl Students Fight | Instagram File Pic (Photo Credit: @Maalaimalar X / Pixabay)

ஜூன் 26, திருப்பூர் (Trending Video): இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் போடும் விஷயத்தில் யாரது கிரஷ் பெரியவன்? என்ற போட்டியில் திருப்பூர் பள்ளி மாணவிகள் நடுரோட்டில் அடித்துக்கொண்ட சம்பவம் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதனிடையே இந்த மாணவிகள் தங்களது பள்ளியில் இரண்டு குழுக்களாக பிரிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பகிர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அடிப்படையில் யார் கெத்து? என்ற போட்டியும் இவர்களுக்குள் இருந்து வந்துள்ளது. Cleaning Tips: பிரிட்ஜில் ஒரே துர்நாற்றமா? இதை கொஞ்சம் முயற்சித்து பாருங்கள்.. நறுமணம் வீசும்.! 

நடுரோட்டில் அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் :

மேலும் தங்களது ஆண் நண்பர்களை வைத்தும் உன்னோட ஆள் பெரியவனா?, என்னோட ஆள் பெரியவனா? என்று போட்டி நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில், பள்ளி முடிந்த பின்னர் கட்டிப்புரண்டு நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். நடுரோட்டில் மாணவிகள் அடித்துக்கொண்டதை கண்டு பலரும் பதறிப்போன நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக மறுநாளே பெற்றோர் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்து இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவினாலும் காவல்நிலையத்தில் எந்த விதமான புகாரும் பெறப்படவில்லை.