பிப்ரவரி 10, லக்னோ (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு முர்ஜா எனப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. முர்ஜா என்றால் வடமாநிலங்களில் முந்தைய காலங்களில் (இந்தியர்களை ஆழ வந்தவர்களால்) பெண் ஆண்களின் நடுவே நடனமாடும் முறை ஆகும். பின்னாட்களில் இவை காழ்புணர்ச்சியால் பெண்களை அடிமைப்படுத்தும் விதமான சூழலை ஏற்படுத்தின. ஆபாச நடனமும் கடைபிடிக்கப்பட்டன. இவை பெண்களின் எதிர்காலம் மற்றும் நலனை கேள்விக்குறியாகும் வகையில் இருந்த நிலையில், அதற்கு அரசு அதிரடி தடையை விதித்து இருந்தது. சில நேரம் இவ்வாறான செயல்கள் விதிமீறலாக பல இடங்களில் சட்டவிரோதமாகவும் நடப்பது உண்டு. IND Vs ENG Test Update: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 3 ஆட்டங்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.! விபரம் உள்ளே.!
வைரலாகும் வீடியோ: இவ்வாறான நிகழ்வுகள் குறித்து தகவல் கிடைத்ததும், காவல் துறையினர் தங்களின் நடவடிக்கையை மேற்கொள்வார்கள். இந்நிலையில், லக்னோவில் செயல்பட்டு வரும் பார் ஒன்றில் நடந்த முர்ஜா குறித்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த வீடியோ எப்போது? எடுக்கப்பட்டது என்ற விபரம் இல்லை. இதனையடுத்து, வீடியோ நெட்டிசன்கள் கண்டனத்துடன் காவல் துறையினரின் கவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் இவ்விசயம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முர்ஜா நடன முறையில் ஆபாசம் இல்லாத விஷயங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.