Man Bites Off Society Secretary’s Nose (Photo Credit:@gaurav1307kumar X)

மே 27, கான்பூர் (Kanpur News): சென்னை, மும்பை, பெங்களூர், லக்னோ போன்ற பெரும் நகரங்களில் பார்க்கிங் பிரச்சனை என்பது மிகப்பெரிய தலைவலியில் ஒன்றாக இருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களுக்கு வாகனங்களை நிறுத்த பிரத்தியேக இடம் கொடுக்கப்படும். உள்ளூரில் நடக்கும் நிலத்தகராறு போல, பார்க்கிங் தகராறு பெரு நகரங்களில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இது தொடர்பான தகராறு ஒன்றில் பார்க்கிங் நிறுவனச் செயலாளரின் மூக்கை ஒருவர் கடித்த சம்பவம் நடந்துள்ளது.

பார்க்கிங் தகராறில் வாக்குவாதம் :

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர், சித்தூர் பகுதியில் முன்னாள் பொறியாளர் ஒருவர் பிளாட் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவருக்கும், முன்னாள் பொறியாளருக்கும் இடையே பார்க்கிங் தொடர்பாக வாக்குவாதம் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஆத்திரத்தில் இருந்த நபர், சொசைட்டி செயலாளரிடம் நேரில் வந்து தகராறு செய்துள்ளார். குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை.. காரில் சடலமாக 7 பேர்.! 

ஆத்திரத்தில் மூக்கை கடித்த நபர் :

அப்போது எழுந்த வாக்குவாதத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நபர், சொசைட்டி செயலாளரின் மூக்கை கடித்து துப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த சண்டை காட்சிகள் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

மூக்கை கடித்தது தொடர்பான வீடியோ :