Water Death (Photo Credit: Pixabay)

டிசம்பர் 24, மரக்காணம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வசித்து வரும் சகோதரர்கள் லோகேஷ், விக்ரம், சூர்யா. இவர்கள் மூவரும் சம்பவத்தன்று பக்கிங்காம் கால்வாயில் மீன்படித்துக்கொண்டு இருந்தனர். அச்சமயம், லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன விக்ரம் மற்றும் சூர்யா, லோகேஷை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்:

அப்போது, நீரின் வேகம் அதிகம் இருந்த காரணத்தால், மூவரும் நீரில் இழுத்து செல்லப்பட்டு மாயமாகினர். மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் மூவரும் வீட்டிற்கு நீண்ட நேரம் ஆகியும் வராத காரணத்தால், அவர்களை அக்கம் பக்கத்தினர் தேடி சென்றனர். அச்சமயம் நீரில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்ற ஐயத்தில், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வானிலை: வடதமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

அதிகாரிகள் தேடுதல் வேட்டை:

தகவலை அறிந்த காவல்துறையினர், தீயணைஜ்பு படையினர் உதவியுடன் முதற்கட்டமாக 10 மணிநேரத்திற்கு மேலாக உடலை தேடி வந்தனர். பின் நேற்று காலையில் 6 மணிக்கு மேல் 22 அதிகாரிகள் மீனவர்களின் உதவியுடன் படகுகளில் தேடல் பணியில் ஈடுபட்டனர். ஒருமணிநேர தேடலுக்கு பின்னர் லோகேஷின் உடல், அவர் விழுந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் சேற்றில் இருந்து மீட்கப்பட்டது.

சடலங்கள் மீட்பு:

சூர்யா, விக்ரமின் உடல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வந்ததால், ஷட்டர் அடைக்கப்பட்டு நீரின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. சென்னையில் இருந்து 11 ஸ்கூபா டைவர்கள் வரவழைக்கப்பட்டு, இரட்டையர்களின் உடல் நேற்று மதியம் 3 மணிக்கு, மாலை 6 மணிக்கு என அடுத்தடுத்து மீட்கப்பட்டது. இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.