Wayanad Landslide & River Bridge (Photo Credit: @Gkgyankksuri / @pradeep_gee X)

ஆகஸ்ட் 02, வயநாடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம், முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 4 கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இந்த துயர சம்பவத்தில் 316 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கருதப்படுத்தால், அவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. களத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்திய இராணுவம், விமானப்படை, கப்பற்படை என முப்படைகளும் இணைந்து பணிகளை தொடருகின்றன.

82 முகாம்களில் 8,000 மக்கள் தங்கவைப்பு:

தற்போது வரை 8000 க்கும் அதிகமான பொதுமக்கள் மீட்கப்பட்டு 82 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் நிலைமை சரியில்லை என்பதால், தன்னார்வலர்கள் நேரடியாக அங்கு வந்து உதவி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுக்கள் தன்னார்வலர்கள் சார்பில் வழங்கப்படும் உதவிகளை பெற்று மக்களுக்கு அதனை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.! 

பாராட்டுகளை பெற்ற இந்திய இராணுவத்தின் செயல்:

இந்நிலையில், ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்துடன் அடித்து செல்லப்பட்ட நிலையில், அதனை கடக்க இராணுவம் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியது. முதலில் பாலத்தை நடந்து கடந்து செல்வதற்கு சிறிய அளவிலான பாலம் அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் வாகன இயக்கத்திற்கான பாலத்தின் தூண்கள் உட்பட பிற கருவிகள் டெல்லி, பெங்களூரில் இருந்து விரைந்து அனுப்பி வைக்கப்பட்டன.

அவை கிடைத்ததும் இராணுவத்தினர் தொடர்ந்து பாலம் அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்திய நிலையில், 36 மணிநேரத்தில் 24 டன் அளவிலான வாகனம் கடந்து செல்லும் வகையில் தற்காலிக இரும்பு பாலத்தை அமைத்தனர். இந்த பாலத்தை கடந்து 25 அவசர ஊர்திகள் முண்டகை பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு உட்பட மீட்பு உபகரணங்களும் அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்திய இராணுவ அதிகாரிகளின் துரித செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

36 மணிநேரத்தில் சாதித்த இந்திய இராணுவம்:

தற்காலிக பாலத்தின் உதவியுடன் ஆற்றை கடக்கும் வாகனங்கள்: