ஜனவரி 12, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் இருந்து உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியை (New Delhi to Varanasi JN) இணைக்கும் வகையில், மத்திய இரயில்வே துறை 22416 வ.எண் வந்தே பாரத் இரயில் சேவையை வழங்கி வருகிறது. இந்த இரயில் 755 கி.மீ தூர சேவையை 8 மணிநேரத்தில் நிறைவு செய்கிறது. வந்தே பாரத் இரயிலுக்கு (Vande Bharat Express ) பயணிகள் மத்தியில் கிடைத்த வரவேற்பால், எப்போதும் இந்த இரயில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும். பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, தங்களுக்கு தேவையான உணவுகளையும் ஆர்டர் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு விற்பனை செய்யப்படும் உணவுகளையும் வாங்கி சாப்பிடலாம்.
இரயிலில் வழங்கப்பட்ட உணவில் துர்நாற்றம்: இந்நிலையில், கடந்த ஜனவரி 06ம் தேதி ஆகாஷ் கேசரி என்ற நபர், மேற்கூறிய வந்தே பாரத் இரயிலில் பயணம் செய்துள்ளார். அவருக்கு பயணத்தின்போது உணவு இரயில்வே நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் பலரும் உணவை பிரித்து சாப்பிட முற்பட்டபோது, உணவு துர்நாற்றம் வீசி இருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆகாஷ், சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இரயில்வே அமைச்சகத்தை குறிப்பிட்டு தனது புகாரை முன்வைத்தார். PM Modi Fasting for Ram Mandir Inauguration: அயோத்தி ராமர் கோவில் கும்பாவிஷேகம்: 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் பிரதமர் மோடி..!
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம்: இதனையடுத்து, இரயில்வே அதிகாரிகளால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, உணவு விநியோகம் செய்ய ஒப்பந்தமிட்டு இருந்த நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேற்படி, நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பயணியிடம் இரயில்வே அமைச்சகத்தின் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இவ்வாறான செயல்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
@indianrailway__ @AshwiniVaishnaw @VandeBharatExp Hi sir I am in journey with 22416 from NDLS to BSB. Food that was served now is smelling and very dirty food quality. Kindly refund my all the money.. These vendor are spoiling the brand name of Vande Bharat express . pic.twitter.com/QFPWYIkk2k
— Akash Keshari (@akash24188) January 6, 2024