ஜூலை 19, ட்ரெண்டிங் (Trending Video): நமது வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள், என்றுமே நமக்கு செல்லங்களாக இருப்பவை. அவற்றை நாம் அன்புடன் பாதுகாத்து பராமரித்து வருவோம். அவர்களுக்கு ஒரு சிறிய உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும், உடனடியாக அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம்.
நமது உடலை கூட சரிவர கவனிக்காமல், செல்ல பிராணிகள் மீது நாம் அளப்பரிய பாசம் வைத்துள்ளோம். நாம் மன வருத்தத்துடன் இருந்தால், அவை நமது நிலையை புரிந்துகொண்ட நம்முடன் விளையாடி நம்மை நிம்மதியடைய வைக்கும். Kondaikadalai Benefits: உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் கொண்டைக்கடலை; அசத்தல் நன்மைகள் லிஸ்ட் இதோ.!
செல்லப்பிராணிகள் இயல்பாகவே தன்னை கவனித்துக்கொள்வோரிடம் அதிக குறும்பு செய்யக் கூடியவை. நம்முடன் வந்து விளையாடும் தன்மை கொண்டவை. பெரும்பாலான நாய்களுக்கு பொதுவாகவே மாத்திரைகள் என்பது பிடிக்காது.
உடல்நலக்குறைவுடன் அவை இருக்கும்போது, சாதத்தில் பிசைந்து மாத்திரைகளை வைத்தாலும், மாத்திரையின் வாசனையை அறிந்து விட்டால் அவை அந்த சாதத்தை ஏற்றுக்கூடபார்க்காது.
இந்த நிலையில், ஒரு குட்டி நாய்க்கு ஒருவர் மாத்திரை கொடுக்க முற்பட்டு, அதன் வாயில் வைத்து அதனை அழுத்தியபோதும், குட்டி நாய் லாவகமாக அந்த மாத்திரையை வெளியே துப்பி விடுகிறது. இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
No thanks 🐶😂pic.twitter.com/5rKmw2Ijfo
— CCTV_IDIOTS (@cctv_idiots) July 14, 2023